எவரும் தோல்வி அடையாத இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கு நீங்களும் விண்ணப்பியுங்கள்!
நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரராக இருந்தால், நீங்கள் உள்நுழையலாம் உள்நுழை
நாம் ULUED என்ற வகையில், சமூக மற்றும் ஆன்மீக விழுமியங்களின் அடிப்படையில் வளர்க்கப்பட்ட, கடந்த காலத்தை மறக்காமல் அதில் ஆழமாக வேரூன்றி, வருங்காலத்தை மதிப்பிட்டு திட்டமிடத் தெரிந்த இளைஞர்களால் மாத்திரமே ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் உயர்ந்த இலக்குகளை இலட்சியமாக் கொண்ட இளைஞர்களை உருவாக்க நாம் பாடுபடுகின்றோம். அவர்கள் சமூகம் மற்றும் உம்மத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைக்க் கூடியவர்களாகவும், தாம் வாழும் காலத்தை விளங்கிச் செயற்படுபவர்களாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள் அன்பையும் அருளையும் அணிகலன்களாக் கொண்ட, அழகிய பன்பாடுகளையுடையவர்களாகத் திகழ்வார்கள். அவ்வாறே வரலாற்றின் ஆழ அகலத்தைப் புரிந்து கொண்டு பொறுப்புணர்வுடன் கருமமாற்றுவார்கள். இத்தகைய இளைஞர்களை உருவாக்கவும் உருவாக்க முயற்சிக்கின்றவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் நாம் பாடுபடுகின்றோம்.